Kathir News
Begin typing your search above and press return to search.

பாமக பிரமுகரை கொலை செய்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்த இம் தாதுல்லா!!

பாமக பிரமுகரை கொலை செய்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்த இம் தாதுல்லா!!
X

G PradeepBy : G Pradeep

  |  14 Oct 2025 12:47 PM IST


என்.ஐ. ஏ அதிகாரிகளிடம் பாமக பிரமுகர் ராமலிங்கத்தை கொலை செய்தவர்களுக்கு தான் அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டிருந்த இம் தாத்துல்லா தெரிவித்துள்ளார். நடந்த 2019 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் மர்ம நபர்களால் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திண்டுக்கல்லை சேர்ந்த 35 வயது உடைய இம் தாதுல்லா என்பவரை ஐந்து நாள் காவலில் வைத்து விசாரணை நடத்திய போது, அவர் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை சார்ந்தவர் என்றும், அதன் அடிப்படையில் தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் ஹிந்துக்களை மதமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்தார்.

மதமாற்றம் செய்யும் நோக்கத்தோடு சில கிராமங்களுக்கு செல்லும் போது திருவனந்தபுரத்தில் மக்களை சந்திக்க சென்ற நிலையில் ராமலிங்கம் அவர்களை தடுத்து கடுமையான வார்த்தைகளால் திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதனால் அவரை கொலை செய்வதற்காக 18 பேர் கொண்ட குழு தேனி மாவட்டத்தில் அமைந்திருக்கும் முஸ்லிம் மதப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் திட்டமிட்டு ராமலிங்கத்தை கொலை செய்து தலைமுறை வாங்கியதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து என்.ஐ. ஏ அதிகாரிகள் இது சம்பந்தப்பட்டிருக்கும் ஐந்து பேர் குறித்த விபரம் தெரிவித்தால் 5 லட்சம் ரூபாய் தரப்படும் என்று கூறியதை தொடர்ந்து, கொடைக்கானலில் தான் நடத்தி வந்த ஆம்பூர் பிரியாணி கடையில் இருக்கும் ரகசிய அறையில் தேடப்படும் குற்றவாளிகளான நபில் ஹாசன், அப்துல் மஜீத் மற்றும் சாஹீல் ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், பூம்பாறையில் இருக்கும் ஒரு இடத்தில் தங்க வைத்து நிதி உதவி செய்து வந்ததாக இம் தாதுல்லா கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News