பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்!! திகைத்து போன பாக்கிஸ்தான் பிரதமர்!!

By : G Pradeep
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் நடந்த போரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவுக்கு கொண்டு வந்த நிலையில் எகிப்தில் நடைபெற்ற காசா அமைதி மாநாடு ஷர்ம் அல்-ஷேக் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கு பெற்றனர்.
அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவை புகழ்ந்து பேசியதோடு, இந்திய பிரதமர் மோடி தன்னுடைய சிறந்த நண்பர் என்று கூறியுள்ளார். அதாவது இந்தியா என்பது மிகச் சிறந்த நாடு என்றும், இங்கு தன்னுடைய நண்பர் மோடி தலைமை பொறுப்பில் இருப்பதாக கூறினார்.
மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைந்து மிகவும் அழகாக வாழ போகிறார்கள் என்று நினைப்பதாக கூறி தனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமரை பார்த்து சிரித்து அப்படித்தானே என்று கேட்டார். மேலும் பிரதமர் மோடியும்,ஷபாஸ் ஷெரீப்பும் சிறந்த தலைவர்கள் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் அதிபர் ட்ரம்பின் அயராத உழைப்பினால் மத்திய கிழக்கில் அமைதி நிலவுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போரை நிறுத்தியதற்காக பாகிஸ்தான் ட்ரம்பின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ததாகவும், தற்பொழுது மத்திய கிழக்கில் பல உயிர்களை காப்பாற்றியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு டிரம்பிற்கு வழங்க பாகிஸ்தான் விரும்புவதாக தெரிவித்தார்.
