திருப்பரங்குன்றம் மலை மேல் குமரனுக்கு வேல் எடுக்கும் விழாவில் பால் குடத்திற்கு தடை!! போலீஸ் மறுப்பு!

By : G Pradeep
திருப்பரங்குன்றம் முருகனுக்கு மலைமேல் வேல் எடுக்கும் விழா நடைபெற்றது. அதில் நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக சுப்ரமணிய சுவாமி தன்னுடைய கையில் இருக்கும் வேல் மூலமாக குன்றத்தின் மேல் இருக்கும் பாறையில் கீரி கங்கைக்கு நிகரான நீர் தீர்த்த சுமையை உருவாக்கிய நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் மழை வேண்டி கோவிலின் மூலவர் கரத்தில் உள்ள தங்கவேல் மழைக்கு மேல் கொண்டு செல்லும் விழா நடைபெற்றது.
அதில் வேலுக்கு பால் அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லாக்கில் மலை மேல் கொண்டு செல்லப்பட்டு அங்கு இருக்கும் சுப்பிரமணியர் கரத்தில் அளித்து தங்கவேலை துணை தீர்த்தத்திற்குள் எடுத்து சென்று 16 முறை அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இந்த நிகழ்விற்கு பல இடங்களிலிருந்து பக்தர்கள் கூட்டம் வந்திருந்தது. இதில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பால்குடம் சுமந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம் மலைமீது பால்குடம் சுமந்து செல்வதற்கு கோவில் கருப்பசாமியை வழிபட்டு வந்தார். அதைப் பார்த்து காவலர்கள் அவரை நிறுத்தி மலை மேல் பால்குடம் கொண்டு செல்வதற்கு அனுமதி கிடையாது என்று மறுத்தனர்.
அதற்கு அவர் பாலபிஷேகம் சுனையில் நடப்பதால், கடந்த 48 நாள் விரதம் மேற்கொண்டு பால்குடம் எடுத்துச் செல்வதாக தெரிவித்த நிலையிலும் நீதிமன்ற பெற்ற பிறகு கொண்டு செல்லுங்கள் என்று காவல்துறையினர் மறுத்து பால் குடத்தை பையில் வைத்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறிய நிலையில் அதன்படி ராமலிங்கமும் எடுத்துச் சென்று நேர்த்திக்கடனை நிறைவு செய்தார்.
