இந்தியாவின் எல்லை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக புதிய அப்டேட்டுகளுடன் வரப்போகும் பிரம்மோஸ் ஏவுகணை!!

By : G Pradeep
இந்திய பாதுகாப்பு துறையின் மிகவும் முக்கியமான ஏவுகணையான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து தயாரித்தது ஆகும். இது இந்தியாவின் பாதுகாப்பில் மிக முக்கியமான இடத்தில் உள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆப்பரேஷன் சிந்தூரில் இந்த ஏவுகணையை பயன்படுத்தப்பட்டது.
300 கிலோ எடையுடைய குண்டுகளை சுமந்து செல்லும் வலிமையும், இந்த ஏவுகணையானது ஒலியைவிட 3.5 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது. இந்நிலையில் தற்பொழுது 500 கி.மீ வரை இலக்குகளை துல்லியமாக தாக்கி அளிக்கும் திறன் கொண்டவையாக உள்ளது. இந்நிலையில் தற்பொழுது இந்தியா இதனுடைய வேகத்தை அதிகரிக்கும் பணிகளை செய்து வருகிறது.
இது 800 கி.மீ தொலைவில் இருக்கும் இலக்கை தாக்கும் வகையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து வரும் 2027 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக தயாரித்து பயன்பாட்டிற்கு வரும் என்றும், அதற்கான சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையை முதற்கட்டமாக கடற்படை மற்றும் இராணுவத்தில் சேர்க்கப்படும் என்றும், சிறிது காலம் பிறகு விமானப்படையில் சேர்க்கப்படும் என்றும் பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏவுகணையின் எடையை குறைத்து தாக்குதல் தூரத்தை அதிகரித்து ஏவுகணையை ஏவுவதற்கான சிறிய ரகங்களை உருவாக்க இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் எல்லை பாதுகாப்பு மேலும் வலுப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
