Kathir News
Begin typing your search above and press return to search.

இதற்காகத்தான் ஆசியான் உச்சி மாநாட்டில் நேரடியாக கலந்து கொள்வதற்கு பிரதமர் மோடி தயக்கம் காட்டுகிறாரா?

இதற்காகத்தான் ஆசியான் உச்சி மாநாட்டில் நேரடியாக கலந்து கொள்வதற்கு பிரதமர் மோடி தயக்கம் காட்டுகிறாரா?
X

G PradeepBy : G Pradeep

  |  24 Oct 2025 5:41 PM IST

இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா உட்பட பல தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பின் 47வது உச்சி மாநாடு மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் வருகின்ற 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடக்க இருக்கும் நிலையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு நாள் பயணமாக மலேசியாவிற்கு செல்ல இருக்கிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி உச்சி மாநாட்டில் காணொளி மூலமாக கலந்து கொள்ளப் போவதாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் உரையாடல் நடத்தியதாகவும், ஆசியான் உச்சி மாநாட்டில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததாக பதிவிட்டிருந்தார். இந்த மாநாட்டில் காணொளி மூலமாக கலந்து கொள்ளப் போவதாகவும், ஆசியான் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான கூட்டமை மேலும் வலுப்படும் என்று பதிவிட்டு இருந்தார்.

இதற்கு முன்பாக மலேசியாவின் பிரதமர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மலேசியா மற்றும் இந்தியாவின் உறவு வலுப்படுத்த பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், முதலீடு மற்றும் வர்த்தகத் துறைகளில் இந்தியா மலேசியாவிற்கு ஆதரவளித்து வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநாட்டில் பிரதமர் மோடி காணொளி மூலமாக கலந்து கொள்ள போவதாக செய்து இருப்பதாகவும் அதை தான் மதிப்பதாக பதிவிட்டிருந்தார்.

ஆனால் பிரதமர் மோடி இந்த உச்சி மாநாடில் காணொளி மூலம் கலந்து கொள்வதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்வுடன் நேரடி சந்திப்பை தவிர்ப்பதற்காக இருக்கலாம் என்று சில தகவல்கள் பரவி வருகிறது. ஏற்கனவே எகிப்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பையும் பிரதமர் மோடி கொள்ளாமல் அந்த மாநாட்டில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கலந்து கொண்ட நிலையில் தற்பொழுது இந்த மாநாட்டையும் காணொளி மூலம் கலந்து கொள்ளப் போவதாக வெளியாகி இருக்கும் தகவல் தற்பொழுது பரவி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News