Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் தொடங்கப் போகும் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தப் பணிகள்!!

தமிழகத்தில் தொடங்கப் போகும் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தப் பணிகள்!!
X

G PradeepBy : G Pradeep

  |  25 Oct 2025 6:54 PM IST

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி அடுத்த வாரத்தில் இருந்து தீவிரமாக நடைபெறப் போவதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து தி.நகர் தொகுதியில் திமுக கட்சியை சேர்ந்த நபர்கள் அதிகாரிகளாக இருக்கும் நிலையில் பகுதியில் இருக்கும் 13 அதிமுக ஆதரவாளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி இருப்பதாகவும், அதை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியநாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியது.

அவர் அளித்த மனுவில் கடந்த 1998 ஆம் ஆண்டு அந்த தொகுதியில் 2,08,349 வாக்காளர்கள் இருந்த நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டில் 36,656 வாக்காளர்கள் மட்டுமே அதிகரித்து இருப்பதாக தகவல் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 13 அதிமுக ஆதரவாளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதும், அவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

வரும் 2026 ஆம் ஆண்டில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என்று உறுதியளிக்க வேண்டும் என்றும், தி. நகர் தொகுதி வாக்காளர் பட்டியலை மீண்டும் சரிபார்த்து திருத்தி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதை விசாரித்த நீதிபதி அந்த தொகுதியில் மொத்தமாக வாக்காளர் சேர்க்கை மற்றும் நீக்கம் நடந்திருப்பதால் அதை சரி பார்த்து திருத்தம் செய்யக்கோரி தேர்தல் நாணயத்திற்கு மனுக்கள் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இது குறித்த ஆவணங்களை தமிழில் மொழி பெயர்த்து தாக்கல் செய்ய வேண்டும் என்று விசாரணையை தள்ளி வைக்க கோரி மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் அடுத்த வாரம் முதல் திருத்த பணிகள் தொடங்க இருப்பதாகவும், அச்சமயத்தில் மனுதாரர் அழித்த புகார்கள் கவனிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை அடுத்த வாரம் தள்ளி வைத்து பீகார் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவு நகல்களை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News