பீகார் மாநிலத்தை விட்டு ஊடுருவல் காரர்களை விரட்டியடிப்போம்!! உறுதியளித்த அமித்ஷா!!

By : G Pradeep
வடமாநிலங்களில் மிகவும் பிரசிதியான சாத் திருவிழா பீகார் உட்பட பல இடங்களில் தொடங்கிய நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்கான வேலையும் நடந்து வருகிறது. இந்நிலையில் பீகாரின் ககாரியா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது சாத் திருவிழா தொடங்கி அனைவரும் பூஜை செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தானும் சாத் தேவியிடம் பீகாரில் காட்டாச்சி விலகி சட்டம் ஒழுங்குபடுத்தவும், அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதற்காகவும், மாநிலத்தை வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்வதற்காகவும் பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தற்பொழுது நடக்க இருக்கும் தேர்தல் ஆனது வெறும் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் அல்லது முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கானது மட்டுமல்ல, தேர்தல் காட்டாட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டுமா அல்லது வளர்ச்சிக்கான ஆட்சியை கொண்டுவர வேண்டுமா என்பது தான்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தால் மட்டுமே பீகார் வளர்ச்சி பெற்று மிகவும் புகழ்பெற்ற நாடாக திகழும். லாலுவின் ஆட்சி ஏற்பட்டால் நாட்டில் கொலை, கொள்ளை போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள்தான் நடைபெறும் என்றும், ஏற்கனவே அவருடைய ஆட்சியில் மாநிலத்தை விட்டு நிறைய தொழிற்சாலைகள் வெளியேறியதால் மாநிலமே பின் நோக்கி தள்ளப்பட்டது. நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த போது பீகாரை நக்சலில் இருந்து விடுவித்து முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லப்பட்டது.
இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு எதுவுமே இல்லை என்றும், லாலு பிரசாந்த் ஆட்சியில் பல வகையான ஊழல் வழக்குகள் பதிவாகி இருந்தது. அது மட்டுமல்லாமல் பல திட்டங்கள் ஓய்வூதியங்களுக்கான பணம் உயர்த்தப்பட்டது. பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் ஆனது 11 வது இடத்தில் இருந்து தற்போது நான்காவது இடத்திற்கு வந்துள்ளதாகவும், 2027 ஆம் ஆண்டிற்குள் மூன்றாவது இடத்திற்கு வரும் எனக் கூறியுள்ளார்.
மேலும் இந்திய ராணுவமானது பயங்கரவாதிகளின் இடத்திற்கு சென்று தாக்குதல் நடத்தும் அளவிற்கு இருப்பதாகவும், ராகுல் காந்தி ஊடுருவல் காரர்கள் பீகாரில் வாழ வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக பேரணிகளை நடத்தி வருவதாகவும், அவர் எவ்வளவு தான் முயன்றாலும் ஊடுருவல் காரர்களை காப்பாற்ற முடியாது. இந்த முறை நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டிலிருந்து எல்லா ஊடுருவல் காரர்களையும் வெளியேற்றி விடுவோம் என்று கூறியுள்ளார்.
