மாவோயிஸ்ட்கலுக்கு காவல்துறை உதவி செய்யும்! சத்தீஸ்கரில் சரணடைந்த மாவோயிஸ்ட் குறித்து பேசிய ஐ.ஜி!

By : G Pradeep
தற்பொழுது பாதுகாப்பு படையினர் சத்தீஸ்கரில் உள்ள மாவோயிஸ்ட்களை ஒலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சியில் பல மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இம்மாதத்தில் மொத்தம் 238 மாவோயிஸ்ட்கள் சரணடைந்துள்ளனர்.
இந்நிலையில் அம்மாநிலத்தில் இருக்கும் பஸ்தார் பகுதியில் 21 மாவோயிஸ்ட்கள் தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைத்து போலீஸிடம் சரண் அடைந்துள்ளனர். இந்த சரணடைந்த 21 பேரில் 13 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அப்பகுதியில் ஐ ஜி ஆபீஸரான சுந்தர்ராஜ், மாவோயிஸ்ட்கள் தற்பொழுது வன்முறையை கைவிட்டு வருவதாகவும், அவர்கள் அனைவரும் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதாகவும் தெரிவித்தார்.
சரண் அடைந்த மாவோயிஸ்ட்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நினைப்பதால் அவர்கள் சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கு தேவையான உதவிகளை பஸ்தார் காவல்துறை செய்து தரும் என்று கூறினார்.
