இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து பன்னாட்டு நிதியம் வெளியிட்ட அறிவிப்பு!!

By : G Pradeep
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் அமெரிக்கா இந்தியா மீது அதிகமான இறக்குமதி வரி விதித்தது. இந்த அமெரிக்கா அதிக வரி விதிப்பால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது எந்தவித பொருளாதார வளர்ச்சி பாதிப்பும் கிடையாது என்று பன்னாட்டு நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி கணிப்பு 6.40%லிருந்து 6.60% இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது 4.80% இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை காரணமாக வைத்து இந்த ஆண்டு தொடக்கத்திலேயே வளர்ச்சியின் கணிப்பை உயர்த்தப்பட்டது.
அதனால் அமெரிக்காவின் அதிகமான வரி விதிப்பால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஈடு செய்ய முடித்தது. பெருமளவில் இந்தியாவின் வளர்ச்சியில் தயாரிப்பு துறையின் வளர்ச்சியும், உள்நாட்டு நுகர்வும், சேவை துறையின் விரிவாக்கமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டுமல்லாமல் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மூலதரை வளர்ச்சியில் 1.90%, ஜப்பானின் பொருளாதார வளர்ச்சியில் 1.10% இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
