பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் கட்டிடமா?? துணை நிற்கிறதா திமுக அரசு!!

By : G Pradeep
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிகளில் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். எனவே கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி நடைபெறும் பொழுது அபகரிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் அரசு நிலங்கள் போன்றவற்றை திருப்பி மீட்டு தருவதற்கான பிரிவு உருவாக்கப்பட்டு பொதுமக்களின் சொத்துக்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்படுவது நடந்து வந்தது.
அதைத்தொடர்ந்து தற்பொழுது மீண்டும் திமுக ஆட்சி நடைபெற்று வரும் சமயத்தில் பொது மக்களின் சொத்துக்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் அபகரிக்கப்படுவது மீண்டும் நடந்து வருகிறது. சென்னையில் பருவ மழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினை தடுக்கும் வடி நிலமாக இருக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பல்லாயிரக்கணக்கான பறவைகள் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் உட்பட பல உயிர்கள் வாழ்ந்து வருகிறது.
இத்தகைய இடத்தில் ரூ. 16 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டு, மத்திய அரசின் உதவியுடன் ரூ.165.68 கோடியில் தேசிய பருவநிலை மாற்றத் தழுவல் நிதியில் 695 ஹெக்டோ் சதுப்பு நிலத்தில் பள்ளிக்கரணை சுற்று சூழல் மீட்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ராம்சருக்கு கீழ் வரும் பள்ளிக்கரணை சதுப்பு நிலமானது பாதுகாக்க வேண்டிய ஒன்றாகும்.
இப்படிப்பட்ட நிலத்தில் மட்டுமல்ல அதை சுற்றி இருக்கும் திட்ட பகுதிகளுக்கு கட்டிடங்கள் கட்டுவதற்கும், சாலைகள் அமைப்பதற்கும் அனுமதிக்க கூடாது என்று தென் மாவட்டங்களுக்கான தேசிய பசுமை தீர்ப்பானைய உத்தரவை சுற்றறிக்கையாக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் அனுப்பியது. தற்பொழுது தமிழக அரசு இந்த விதிகளை கண்டுகொள்ளாமல் சுமாா் 15 ஏக்கா் நிலத்தை ரூ.2,000 கோடியில் 1,250 குடியிருப்புகளைக் கட்டுவதற்கு தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகிறது.
இது குறித்து எந்தவித பதிலும் அரசு அளிக்காத நிலையில் அந்த நிலத்தில் கட்டப்படும் கட்டிடத்திற்கு உறுதித் தன்மை என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. இந்த நிலங்கள் அழிக்கப்பட்டால் வெள்ள பாதிப்பு அதிகரித்து நீர் மட்டம் குறைவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
