முதலமைச்சரின் செயலை கண்டு கடுப்பான இணையவாசிகள்!! அதிருப்தியில் பொதுமக்கள்!!

By : G Pradeep
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் அக்டோபர் 17ஆம் தேதி வெளியான பைசன் திரைப்படத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி பல அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இத்திரைப்படத்தில் சாதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாக உள்ளது. சாதியை குறித்து பேசும் இத்திரைப்படத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து வரும் அரசியல் கட்சிக்காரர்கள் உண்மையில் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
நாட்டில் சாதி வேறுபாட்டால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டு இருக்கும் சமயத்தில் அவற்றை மாற்றும் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சாதியை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தை பார்த்து அதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதை பார்க்கும் பொழுது பொதுமக்களுக்கு மத்தியில் அதிர்ப்தி ஏற்பட்டு வருகிறது.
இந்த திரைப்படத்தில் ஏற்படுத்தப்பட்ட அரசியலை தாண்டி அதை வைத்து பொதுவெளியில் அரசியல் வரை உருவாக்கி இருப்பதே உண்மை. இந்த திரைப்படத்திற்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தது தவறில்லை என்றாலும் கூட அதே சமயம் சமூகத்தில் நடக்கும் ஜாதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் இருந்து வருகிறார்.
அமைவதில் கூட வேங்கைவயல் பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தினர் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலந்த சர்ச்சையை எழுந்தது. இந்த பிரச்சனைக்கு எந்தவித கருத்தையும் தெரிவிக்காத முதலமைச்சர் தற்போது பைசன் படத்தை பார்த்துவிட்டு கருத்து தெரிவித்திருப்பது பொதுமக்களுக்கும், இணைய வாசிகளுக்கும் அதிர்ப்தி ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது.
