முதல்வர் திறந்து வைத்த நெல் கொள்முதல் நிலையம்!!அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நிலைமை!!

By : G Pradeep
இந்த ஆண்டு 6.50 லட்சம் ஏக்கரில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில் அதை கொள்முதல் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது. அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் உங்களுடைய அறுவடை செய்த நெல்லுக்கு பல நாள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு தஞ்சாவூர் மற்றும் ஒரத்தநாடு பகுதிகளில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை சாலையோரங்களில் கொட்டி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பெய்த மழையால் நனைந்து போன நெல்மணிகள் முளைத்தது மட்டுமல்லாமல் அறுவடைக்கு தயாரான நெற்பயிரும் மழையில் மூழ்கி சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அரசின் கொள்முதல் நிலையங்களில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டிருந்த நெல்லை வெளியூருக்கு அனுப்பாமல் வைத்திருந்ததால் இடமில்லாமல் போனதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் ரயில் மூலம் வெளியூருக்கு அனுப்பப்படும் நெல் மூட்டைகளை பார்வையிட வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஒரத்தநாடு பகுதியில் பத்து வருடத்திற்கு முன்பாக முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையதிலும் மூடைகள் அடுக்கி வைப்பதற்கு இடமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்ததாகவும், ஆனால் அங்கு ஐந்தாயிரம் நெல் மூட்டைகளை அடக்கி வைக்கும் அளவிற்கு வசதி இருந்தும் அதிகாரிகள் இப்படி தெரிவித்திருக்கும் நிலையில் ஒரு வருடமாக இந்த கொள்முதல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இருக்கின்றனர். இந்த நிலையும் பயன்பாட்டில் இருந்திருந்தால் ஓரளவுக்கு பாதிப்பை தவிர்த்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் அதிகாரிகளின் இந்த செயலுக்கு விவசாயிகள் கேள்வி கேட்டபோது போதிய சாலை வசதி இல்லை என்றும் அதனால் செயல்பாட்டிற்கு வரவில்லை என அதிகாரிகள் காரணம் கூறுகின்றார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. நிலையத்தை திறந்து ஒரு வருடம் ஆன நிலையிலும் இன்னும் சாலை வசதி ஏற்படுத்தாமல் அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுகிறது. விரைவில் இவற்றை சரி செய்து கொள்முதல் நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பலதரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
