திமுக எதிர்க்கட்சியாக இருந்த வரை தான் விவசாயிகளுக்கு பாதுகாப்பு!! பி.ஆர்.பாண்டியன் அதிரடி பேட்டி!

By : G Pradeep
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் மதுரையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தென் மண்டல தலைவர் ஒ.மாணிக்கவாசகம் தலைமையில், மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன் திமுக அரசு பொறுப்பு ஏற்று 5 ஆண்டுகள் நிறைவடைய போகும் நிலையில் தமிழக முழுவதும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்திருந்தது.
ஆனால் ராமநாதபுரத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை ஒஎன்சிஜிக்கு ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. தமிழக அரசுக்கே தெரியாமல் அமைச்சர் தென்னரசு அனுமதி அளித்திருப்பதாகவும் அதனை திரும்ப பெறக்கோரி திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் கடந்த அதிமுக ஆட்சியில் 142 அடியில் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலையில் அனைத்து மாவட்டங்களும் நீர் அனுப்பப்பட்டது.
ஆனால் திமுக ஆட்சியில் கேரளா அரசு 142 அடி நீரை தேக்கி வைப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை. மேலும் திமுக அரசு ரூல்கர்வ் முறையை பின்பற்றி நீரை திறந்து விடுவதால் ஐந்து மாவட்டங்களின் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாக உச்ச நீதிமன்றம் அளித்த உரிமை திமுக அரசிடமிருந்து திரும்ப பெறப்பட்டது.
நான்கு ஆண்டுகளாக நீர் பாசனத்திற்கு நிதி ஒதுக்காமல் திமுக அரசு செயல்பட்டு வருவதோடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திமுக அரசு கொண்டுவந்து பல விவசாயிகளின் வாழ்வுரிமையை பறித்துள்ளது கூறியதோடு திமுக அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் வரை விவசாயிகள் பாதுகாப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் திமுக அரசு எதிர்க்கட்சியாக இருப்பது தான் தமிழகத்தின் நலனுக்கே மிகவும் நல்லது என்று தெரிவித்துள்ளார்.
