திடீரென்று பின்வாங்கிய கேரளா அரசு!! பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து மத்திய அரசுக்கு கடிதம்!!

By : G Pradeep
கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் பி.எம்.ஸ்ரீ. இந்தியாவில் இத்திட்டத்தில் இணைவதற்காக தமிழ்நாடு மற்றும் கேரளா உட்பட சில மாநிலங்கள் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டிய சர்வ சிக்ஷா அபியான் திட்ட நிதியை நிறுத்தி வைத்தது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு திட்டத்தை ஏற்றால்தான் நிதி கிடைக்கும் என்றால் அந்த நிதியே வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இதைப் பின்பற்றிய நிலையில் திடீரென பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டது.
இந்நிலையில் அக்கட்சியின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தன. இதன் காரணமாக கேரள அரசு அத்திட்டத்தில் இணையும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில நிபந்தனைகளை தளர்த்த கோரி மாநில அரசு மத்திய அரசிற்கு கடிதம் வழியாக தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சரியான பதில் கிடைக்கும் வரை ஒப்பந்தம் செயல்பாட்டிற்கு வராது என்று தகவல் கூறப்பட்டு வருகிறது.
