நாமக்கல் தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்!! ஆய்வில் வெளிவந்த உண்மை!!

By : G Pradeep
நாமக்கல் மாவட்டம் பல்லக்காபாளையம் கிராமத்தில் அமைந்திருக்கும் எக்ஸெல் தனியார் கல்லூரி நிறுவனத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 27 ம் தேதி கல்லூரி விடுதியில் தங்கியிருந்த 128 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் கல்லூரியில் இயங்கி வரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நாமக்கல்லில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் விடுதியில் உணவிற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தூய்மையாக இல்லை என்றும்,கல்லூரி உணவக இருப்பு அறை, உணவு பரிமாறும் கூடம், மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகியவை சுத்தமாக இல்லை என்றும் சமையலறைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் கல்லூரிக்கு நவம்பர் 2ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக வலைதள பக்கங்களில் நான் இருக்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஐந்து மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் பரவி வந்த நிலையில் கல்லூரி தரப்பில் அது பொய்யான தகவல் என்று கூறப்பட்டுள்ளது.
சீல் வைக்கப்பட்ட சமையலறையை புதுப்பித்து உணவு பொருட்களை மாற்றம் செய்து, தண்ணீர் தொட்டியை பராமரிப்பு செய்த பிறகு தான் சமையல் அறை திறக்க உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 220 மாணவர்களுக்கு சிகிச்சை அளித்து வீடு திரும்பி உள்ளதாகவும், பெரிய அளவில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன் கீழ், கல்லூரி விடுதி நிர்வாகத்திற்கு 48 மணி நேரத்திற்குள் விடுதி, சமையலறை மற்றும் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக நாமக்கல் ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
