Kathir News
Begin typing your search above and press return to search.

மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நுழைந்த மர்ம நபர்!! விசாரணையில் வெளிவந்த திடிக்கிட்ட உண்மைகள்!!

மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நுழைந்த மர்ம நபர்!! விசாரணையில் வெளிவந்த திடிக்கிட்ட உண்மைகள்!!
X

G PradeepBy : G Pradeep

  |  1 Nov 2025 1:17 PM IST

மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் கடந்த வாரத்தில் விஞ்ஞானி என்று மர்ம நபர் ஒருவர் நுழைந்ததாகவும் அவரை பிடித்து விசாரித்த போது அவர் பெயர் அக்பர் குத்புதின் உசைனி என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் உண்மையில் விஞ்ஞானி இல்லை என்பதும், அந்த நபரிடமிருந்து அணு ஆயுதங்களின் தகவலும், 14 வரைபடங்களும் கிடைத்த நிலையில் அவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் கைதானவரிடமிருந்து பல போலி பாஸ்போர்ட்டுகளும், பான் கார்டுகள், ஆதார் கார்டுகளும் மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி என்பதற்கான போலி அடையாள அட்டையும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அதில் இவருடைய பெயர் அலி ராசா உசைனி என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அடையாள அட்டையில் அலெக்சாண்டர் பார்மர் என்ற பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது வெளிநாடுகளுக்கு தொலைபேசி மூலம் கடந்த சில மாதங்களாக அழைப்பு மேற்கொண்டு வந்ததாகவும் தெரியவந்தது. இதை பார்க்கும் பொழுது வெளிநாட்டுடன் இவருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், இந்த அமைப்புகள் அணு ஆயுதம் தொடர்பான கட்டுரைகள் வழங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இவர் தன்னுடைய அடையாளம் மற்றும் பெயரை மாற்றிக் கொண்டு வாழ்ந்து வந்ததாகவும், அந்த 2004 ஆம் ஆண்டு துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டு, போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் மற்றும் தேஹ்ரான் போன்ற நகரங்களுக்கு சென்று வந்ததாகவும், உண்மையில் இவர் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர் போலி ஆவணங்களை பெறுவதற்கு கடந்த 1996 ஆம் ஆண்டில் விற்கப்பட்ட அவருடைய வீட்டு முகவரியை பயன்படுத்தி வந்ததாகவும், அதற்கு இவரின் சகோதரர் அடில் உசைனி மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முனாசில் கான் என்பவரும் உதவி செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News