Kathir News
Begin typing your search above and press return to search.

சர்வதேச தரத்தில் இருக்கும் இதய ஸ்டென்ட்டுக்கு டஃப் கொடுக்கும் இந்திய புதிய தலை​முறை இதய ஸ்டென்ட்​டு!!

சர்வதேச தரத்தில் இருக்கும் இதய ஸ்டென்ட்டுக்கு டஃப் கொடுக்கும் இந்திய புதிய தலை​முறை இதய ஸ்டென்ட்​டு!!
X

G PradeepBy : G Pradeep

  |  1 Nov 2025 6:31 PM IST

அமெரிக்​கா​வின் சான்​பி​ரான்​சிஸ்​கோவில் இதய சிகிச்சை நிபுணர்களின் உலக அளவிலான மாநாடு நடைபெற்று வந்த நிலையில் அதில் டெல்லி பத்ரா மருத்​து​வ​மனை டீனும், இதய சிகிச்சை நிபுணரு​மான டாக்​டர் உபேந்​திர கவுல், டுக்​ஸ்​டோ-2 என்னும் இந்தியாவில் டாக்​டர் கவுல் தலை​மை​யில் நடைபெற்ற பரிசோதனை செய்யப்பட்ட முடிவை தாக்கல் செய்தார்.

இதனுடைய துணைத் தலைவராக டாக்​டர் பால், திட்ட இயக்​குன​ராக டாக்​டர் பிரியதர்​ஷினி ஆகியோர் பங்கேற்றனர். இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை இதய ஸ்டென்ட், சுப்​ராப்​ளக்ஸ் க்ரஸ் மற்றும் அமெரிக்க தயாரிப்பில் சர்வதேச சந்தையில் கிடைக்கக்கூடிய ஜீயன்​ஸ் என்ற இதய ஸ்டெண்ட்​டும் போன்றவை இடம் பெற்றிருந்தது.

இதைத் தொடர்ந்து டாக்டர் கவுல், இந்த ஸ்டென்ட் குஜராத்தின் சூரத் நகரில் தயாரிக்கப்படுவதாக கூறினார். மேலும் இந்த பரிசோதனையானது இந்தியாவில் 66 இதய சிகிச்சை மையங்களில் நடத்தப்பட்டதாகவும், அதில் நீரிழிவு மற்​றும் இதயத்​துக்கு ரத்​தம் செலுத்​தும் 3 முக்கிய நாளங்களிலும் அடைப்பு இருப்பவர்களுக்கு இந்​திய தயாரிப்பு ஸ்டென்ட் வைத்து பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் இந்திய தயாரிப்பு எந்த விதத்திலும் சர்வதேச தரத்தில் இருக்கும் ஸ்டென்ட்​டுக்கு குறைவானது இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News