காங்கிரசில் புறக்கணிக்கப்படும் மகளிர்கள்!! புலம்பும் பெண் நிர்வாகிகள்!!
By : G Pradeep
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவரான ஹசீனா சையத் தமிழக காங்கிரஸில் மகளிருக்கு மரியாதை இல்லை என கூறியுள்ளார். கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தியின் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்ற நிலையில் அதற்கு காங்கிரஸ் மகளிர் அணியில் இருக்கும் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து கட்சி நிர்வாகத்தில் கேட்டபோது, நீங்கள் வேண்டுமானால் தனியாக கூட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறியதாகவும், அதன் பிறகு தனியாக நினைவஞ்சலி கூட்டம் நடத்தியதாகவும் தெரிவித்தார்.
கட்சி சார்பாக எந்த வேலை கொடுத்தாலும் சிறப்பாக செய்து வருகின்றோம் என்றும், திருநெல்வேலி சொன்னதுக்கு அதிகமாக ஏழாயிரம் பேரை திரட்டியதில் முதல் கொண்டு பல பணிகள் சிறப்பாக செய்துள்ளோம்.
அப்படி இருக்கும் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருக்கும் சிலர் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்றும், திருநெல்வேலி மாநாட்டில் மேடையில் தங்களுக்கான இடம் ஒதுக்கவில்லை என்றும், இதுகுறித்து தலைமைக்கும், மேலிடத்தில் இருப்பவர்களிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. மகளிருக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
