கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!! ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைமை!!

By : G Pradeep
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியில் மொபைல் கடை நடத்தி வந்த இளைஞரான வினித் மற்றும் அவருடைய 20 வயதுடைய காதலியும் கடந்த நவம்பர் 2ம் தேதி இரவு 11 மணி அளவில் கோவை விமான நிலையத்தின் பின்புறப் பகுதியில் காருக்குள் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் வினித்தின் காரை அடித்து நொறுக்கி வினித்தை தாக்கி விட்டு உடன் இருந்த அந்தக் கல்லூரி மாணவியை தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து வினித் பீளமேடு காவல்துறையினரிடம் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு காவல்துறையினர் வினித் மற்றும் கல்லூரி மாணவியை மீட்டனர். இந்நிலையில் மாணவியை தனியார் மருத்துவமனையிலும், வினித்தை கோவை அரசு மருத்துவமனையிலும் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடியவர்களை பிடிப்பதற்காக ஏழு தனிப்படைகள் அமைத்து விசாரித்ததில் இரண்டு பேர் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதும், ஒருவர் சுமார் 25 வயது இளைஞர் என்றும் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் மூன்று பேரும் கோவில்பாளையத்தில் டிவிஎஸ் 50 ஒன்றை திருடி கொண்டுவரும் வழியில் இச்சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
