Kathir News
Begin typing your search above and press return to search.

தந்தையுடன் சேர்ந்து இரண்டு மகன்கள் செய்த காரியம்!! மேட்டுப்பாளையத்தில் நடந்த சம்பவம்!!

தந்தையுடன் சேர்ந்து இரண்டு மகன்கள் செய்த காரியம்!! மேட்டுப்பாளையத்தில் நடந்த சம்பவம்!!
X

G PradeepBy : G Pradeep

  |  4 Nov 2025 12:22 PM IST

சுமையா அலாவுதீன் தம்பதிகள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வசித்து வந்த நிலையில் அலாவுதீன் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு அலாவுதீன் காணவில்லை என்று அவருடைய மனைவி சுமையா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அலாவுதீன் ஹக்கீம் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது தெரிய வந்து அலாவுதீனின் சகோதரரான ஆரிஃப் மற்றும் அவருடைய நண்பர் கௌதம் ஹக்கீமை கத்தியால் குத்தியது தெரியவந்து ஹக்கீம் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆரிஃப் மற்றும் கௌதம் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் காவல் துறையினர், காரமடை நகராட்சியில் இருக்கும் திமுக கவுன்சிலரான ரவிக்குமாருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

அதில் இரண்டாவது மகனான சரண்குமாரின் மனைவி பூஜா ரவி குமாருக்கு சொந்தமான மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் அமைந்திருக்கும் டீ கடையில் இருந்து வந்த நிலையில் அலாவுதீன் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடைசியாக ரவிக்குமாரின் வீட்டிற்கு அலாவுதீன் சென்ற பிறகு அவர் மாயமாகி விட்டதாகவும், இது தொடர்பாக ரவிக்குமாரின் இரண்டு மகன்கள் இடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் அலாவுதீன் பூஜாவை ஆகிய இருவருக்கும் இடையில் தகாத பழக்கம் இருந்து வந்ததாகவும், அதனால் அலாவுதீனை கடந்த 2024 ஏப்ரல் மாதம் அழைத்து மூன்று பேரும் இணைந்து கொலை செய்து மாதேஸ்வரன் மலைப்பகுதியில் அவருடைய உடலை எரித்து தடயத்தை அளித்ததாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று அங்கு இருக்கும் எலும்புகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்து ரவிக்குமார் மற்றும் அவருடைய இரண்டு மகன்களை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News