கரூர் சம்பவத்திற்கு அரசும், காவல்துறையும் தான் காரணம்! சிபிஐ அதிகாரிகளிடம் மனு அளிக்க வந்த ஜோதிடர்!

By : G Pradeep
கரூர் தாலுகா பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் 300க்கும் மேற்பட்ட அவர்களுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் வீடுகள் கடைகள் என அனைத்தையும் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணையில் பொதுமக்கள் மற்றும் பிரச்சாரத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் என அனைவரிடமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றுலா மாளிகைக்கு வெளியில் தங்கியும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் முத்துசாமிபுரத்திலிருந்து விசாரணைக்கு வருபவர்களை வழக்கறிஞர் ஒருவர் தூண்டி விடுவதாக சந்தேகம் எழுந்த நிலையில் அதிகாரிகள் அவரை விசாரணைக்கு ஆஜராக கோரி சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். கரூர் பசுபதிபாளையத்தை சேர்ந்த ஜோதிடர் சுந்தரம் சிபிஐ அதிகாரிகளை கடந்த நவம்பர் 5ம் தேதி சந்திக்க வந்த நிலையில் இன்ஸ்பெக்டர் மனோகரன் அவரிடம் தற்போது போலீஸாரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை வருமாறு கூறி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
மேலும் இது போன்ற நபர்களை ஆதரிக்க வேண்டாம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர் இவர் பின்னணியில் வேறு யாராவது இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறினார். மேலும் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி பசுபதிபாளையம் ரவுண்டானா அருகே திமுக கூட்டம் நடைபெற்ற நிலையில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அப்படி இருக்கையில் தாவெக கூட்டத்திற்கு அனுமதி அளித்தது ஏன் என்று எஸ்பியிடம் மனு அளித்ததாக கூறினார். இந்த சம்பவத்திற்கு அரசு மற்றும் கரூர் காவல்துறை தான் முழு காரணம் என்றும், போக்குவரத்தை தடை செய்து இதற்கு அனுமதி அளித்ததும், போலீசார் நடத்திய தடியடி காரணமாக மக்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இதன் பின்னணியில் சில சதி செயல்களும் இருப்பதாக தெரிவித்தார்.
