தே.ஜ.கூட்டணிக்கு தான் பெரும்பான்மை!! பீகார் முதல் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு பிரதமர் மோடி பதிவு!!

By : G Pradeep
பீகாரில் சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி வெளியிட்ட இணையதள பதிவில், வாக்காளர்களுக்கு இடையில் அதிகமாக மகிழ்ச்சி தெரிவதாகவும், ஆதலால் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் வரவேற்பு கிடைக்கும் என்பது தெரிகிறது என கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து பீகாரில் நடக்க இருக்கும் இரண்டாவது கட்ட சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி இன்று இரண்டு பேரணிகளில் உரையாற்ற உள்ளதாகவும், முதலில் ஃபோர்ப்ஸ்கஞ்சில் பொதுக்கூட்டத்திலும், பிறகு பகல்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் உரையாற்றுகிறார்.
பீகாரின் சட்டப்பேரவையில் உள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் 18 மாவட்டங்கள் உள்ளடக்கி இருக்கும் நிலையில் 122 பெண்கள் உட்பட 1314 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்கு சாவடிகள் 45,341 அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கையானது மொத்தம் 3.75 கோடி என கூறப்படுகிறது.
