மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்ட தீவிரவாதி அபுபக்கர் சித்திக்!!

By : G Pradeep
அபுபக்கர் சித்திக் பல தீவிரவாத செயல்களுக்கு தலைமையாக செயல்பட்டு வந்தவர். இவர் கடந்த 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி ஆந்திர மாநிலம் அன்னமய்யா என்னும் மாவட்டத்தில் உள்ள ராய்சூட்டியில் தமிழக தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவருடைய கூட்டாளியான முகமது அலியையும் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டில் ஆய்வு நடத்தப்பட்ட போது அங்கிருந்து வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஆந்திரா என்ஐஏ அதிகாரிகள் அபுபக்கரை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்காக புழல் சிறையில் இருந்து ஆந்திராவுக்கு அழைத்து சென்றனர். இந்த விசாரணை நடந்து முடிந்த நிலையில் மீண்டும் அபுபக்கரை புழல் சிறையில் அடைத்து விட்டனர்.
