Kathir News
Begin typing your search above and press return to search.

நூறாவது நாளாக தொடரும் போராட்டம்!! சென்னை ரிப்பன் மாளிகை முன்பு குவிந்த போலீசார்!!

நூறாவது நாளாக தொடரும் போராட்டம்!! சென்னை ரிப்பன் மாளிகை முன்பு குவிந்த போலீசார்!!
X

G PradeepBy : G Pradeep

  |  8 Nov 2025 9:23 PM IST

சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையின் வெளியே கடந்த ஆகஸ்ட் மாதம் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் வேண்டியும் தனியார் மயமாக்கலை கண்டித்து 13 நாட்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அவர்களை நள்ளிரவில் காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கானது சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பல இடங்களில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் வீடுகளிலேயே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

மேலும் அல்லிக்குளம், உழைப்பாளர் சிலை, எக்மோர் மணியம்மை சிலை அருகாமையிலும், மெரினா கடற்கரை, சென்னை மண்டலங்களான ஐந்து மற்றும் ஆறு அலுவலகத்தின் அருகில் இருக்கும் சாலைகளை சுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் போராட்டம் தொடங்கி நூறு நாட்கள் ஆன சென்னை ரிப்பன் மாளிகை முன்பாக மீண்டும் போராட்டம் நடக்கப் போவதாக தகவல் கிடைத்த நிலையில் அங்கு தூய்மை பணியாளர்கள் கூடிவிடாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News