டெல்லியில் வெடித்து சிதறிய கார்!! விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் உண்மைகள்!!

By : G Pradeep
கடந்த இரண்டு நாட்களாக டெல்லி மற்றும் ஹரியானா பகுதியில் மூன்றாயிரம் கிலோ வெடி மருந்துகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் நேற்று முன்தினம் கார் ஒன்று வெடித்து 9 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் காயம் அடைந்தனர். கார் வடித்து உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் வெடித்து சிதறிய நிலையில் காணப்பட்டதாகவும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு நிறுவனம் கார் ஓட்டியவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. கார் ஓட்டிய நபரின் பெயர் டாக்டர் முகமது உமர் என்று கூறப்படுகிறது. அந்த காரில் அம்மோனியம் நைட்ரேட் மற்றும் RDX வெடி மருந்துகள் போன்றவை வைத்திருந்திருக்கலாம் என விசாரித்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்தக் கார் ஆனது பார்க்கிங் பகுதியில் 3.19 மணியளவில் நிறுத்தப்பட்டு அதன் பிறகு 6:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டது.
காரில் இருந்த நபர் தற்கொலை தாக்குதலுக்கு முயற்சி செய்து இருப்பதாக சந்தேகம் எழுந்தது. காரை ஓட்டிய நபர் ஒரு இடத்தில் கூட இறங்காமல் காத்துக் கொண்டிருந்தது யாரோ ஒருவரின் உத்தரவுக்காக காத்துக் கொண்டு இருந்தது போல தெரிகிறது. இந்நிலையில் மாலை 6:52 மணி அளவில் கார் வெடித்துள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து பீகார்,மும்பை, கொல்கத்தா, பெங்களூர் உட்பட பல மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3000 கிலோ வெடி மருந்துகளை பறிமுதல் செய்யப்பட்டதோடு இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்று தேசிய புலனாய்வு நிறுவனம் கூறி வருகிறது.
நேரடியாக இதுபோன்ற சம்பவங்களில் தீவிரவாதிகள் ஈடுபடாமல் தீவிரவாதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் போன்ற படித்தவர்களை வைத்து இது போன்ற சம்பவங்களை செய்து வருவதாக கூறப்படுகிறது.
