டெல்லியில் வெடித்து சிதறிய கார்!! விசாரணையில் வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்!!

By : G Pradeep
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் வெடித்து 20 பேர் காயமடைந்து 12 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து NIA விசாரித்து வரும் நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய யாரையும் விட்டு வைக்க மாட்டோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் டாக்டர் முகமது உமர் ஈடுபட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முன்பாக நான்கு லக்னோவை சேர்ந்த பெண் டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தற்பொழுது வெடித்த இந்த கார் மூன்று மணி நேரம் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் காரை விட்டு உமர் வெளியில் வராதது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதற்கு முன்பாக அல் பலாஹ் மருத்துவக் கல்லூரியில் 11 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததும், இங்கிருந்து டாக்டர் உமர் இந்த காரை எடுத்துச் சென்றுள்ளார்.
மேலும் கடந்த 29ஆம் தேதி தான் இந்த காரை விலைக்கு வாங்கி பியூசி சான்றிதழ் பெற்றிருப்பதாகவும் தெரிகிறது. உமர் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பயத்தில் வெடிகுண்டு இருந்த காரை எடுத்துச் சென்றபோது இதுபோன்று வெடித்திருக்கலாம் என்றும், உமர் அதிலிருந்தாரா அல்லது தப்பி விட்டாரா என்பது இன்னும் தெரியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
முஜாமில் சகீலிடம் விசாரணை நடத்திய பொழுது அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி செங்கோட்டையில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்ததாகவும், அதற்கான ஒத்திகை பார்த்ததாகவும், தீபாவளியை ஒட்டி மக்கள் கூடும் மார்க்கெட் பகுதியில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த இருந்த நிலையில் அது முடியாமல் போனதாக தெரிவித்துள்ளார். இதில் அந்த கல்லூரியை சேர்ந்த பல டாக்டர்கள் சம்பந்தப்பட்டிருப்பது ஜம்மு காஷ்மீர் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
