இந்துக்களிடம் நீதிபதி கவாய் மன்னிப்பு கேட்க வேண்டும்!! அமெரிக்க வாழ் இந்துக்கள் போராட்டம்!!

By : G Pradeep
Stop Hindu Genocide என்கின்ற அமைப்பு கடந்த நவம்பர் 8ம் தேதி இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் மேற்பார்வையில் இருக்கும் கஜுராஹோ கோயிலில் இருப்பதாகக் கூறப்படும் புகழ்பெற்ற விஷ்ணு சிலையை மீட்டெடுப்பதற்காக மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அந்த விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் கூறிய கருத்துக்கள் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாக உள்ளது என அமெரிக்காவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நீதிபதிக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த அமைப்பின் சார்பாக நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. வழக்கை விசாரிக்கும் பொழுது நீதிபதி கவாய், நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்கிறீர்கள்.
கடவுளிடமே ஏதாவது செய்ய சொல்லுங்கள். இது தொல்பொருள் தளம் என்பதால் ASI தான் அனுமதி வழங்க வேண்டும் என கூறியதாக தகவல்கள் பரவி வந்தது. இதனால் Stop Hindu Genocide அமைப்பானது நீதிபதி கவாய் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான்கு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த அமைப்பானது இதற்கு முன்பாக பல நீதிபதிகளின் கருத்துக்களுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், நாட்டின் தூணாக இருக்கும் நீதித்துறை அனைத்து மக்களின் பாரம்பரியத்தையும் மதித்து சேவை செய்ய வேண்டும் என்பதே இதனுடைய நோக்கம் என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்காவின் குறிப்பிட்ட சில நகரங்களில் இந்த போராட்டத்தை மேற்கொள்வதற்கு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
