தீவிரவாதிகளின் சதி திட்டத்தை கண்டறிந்த ஸ்ரீநகர் எஸ்பி சந்தீப் சக்கரவர்த்தி!!

By : G Pradeep
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் நவ்காம் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு சார்பில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டது. அதில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வழக்கமாக விடப்படும் மிரட்டல் போல போஸ்டரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்துவதற்காக ஸ்ரீநகர் எஸ்எஸ்பி டாக்டர் ஜி.வி.சந்தீப் சக்கரவர்த்தி உத்தரவிட்டார்.
அதன் பிறகு போஸ்டர் ஒட்டியவர்களை சிசிடிவி கேமராக்களை வைத்து கண்டறிந்து விசாரணை செய்யும் பொழுது அவர்கள் மீது ஏற்கனவே கல் எரிந்த வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. தொடர்ச்சியாக அவர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணையில் தீவிரவாத சதி குறித்த சில தகவல்கள் கிடைத்தது. இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ஜம்மு காஷ்மீர், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் காஷ்மீர் மருத்துவர்கள் சிலரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஜெய்ஸ் இ முகமது அமைப்புடன் தொடர்பு கொண்டு தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டு வந்ததாகவும் அதன் தொடர்ச்சியாக டெல்லி செங்கோட்டை பகுதியில் உமர் காரை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த விசாரணையில் பல சதி திட்டங்கள் முறியடிக்கப்பட்ட நிலையில், சந்திப் சக்கரவர்த்திக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் இவருடைய தலைமையிலான காஷ்மீர் போலீசார்தான் ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கையை மேற்கொண்டு பகல் காமில் தாக்குதல் நடத்தி மூன்று தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.
