மேற்கு வங்கத்தில் இறந்ததாக கூறி வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்ட நபர் மீண்டும் வந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி!!

By : G Pradeep
தற்பொழுது இந்தியாவை பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதற்கு SIR படிவம் பல மாநிலங்களில் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் வாக்காளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று இந்த படிவத்தை நிரப்பி வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் பர்கனாஸ் மாவட்டத்தில் இருக்கும் பாக்தா கிராமத்தை சேர்ந்த ஜகபந்து மண்டல் 28 ஆண்டுகளுக்கு முன்பாக வேலைக்காக நண்பர்களுடன் குஜராத்திற்கு சென்ற நிலையில் அவருடைய குடும்பத்தினர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை சொந்த ஊரிலேயே விட்டு விட்டு வேலைக்காக சென்றுள்ளார்.
அவர் சென்று பல ஆண்டுகள் ஆன நிலையில் இந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்ததை தொடர்ந்து அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் அவரை தேடியும் கிடைக்கவில்லை என்று நினைத்து அதன் பிறகு அவருடைய மனைவியும் உன் கணவர் இறந்த பிறகு செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்து விட்டு என்னுடைய இரண்டு குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார்.
அவர் சென்று 28 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது திடீரென்று ஜகபந்து மண்டல் வீட்டிற்கு வந்த நிலையில் அவருடைய குடும்பத்தினர் யாருக்குமே அவரை அடையாளம் தெரியாமல் இருந்துள்ளது. அதன் பிறகு அவரிடம் பேசியதில் மனைவி மற்றும் தந்தை சகோதரர்கள் ஆகியோர் வந்திருப்பது ஜகபந்து மண்டல் தான் என்று உறுதி செய்தனர்.
இதை தொடர்ந்து வேலையை தேடி குஜராத்திற்கு சென்று அதன் பிறகு அங்கிருந்து மும்பை சென்று விட்டதாகவும், பிறகு மேற்கு வங்கத்தில் உள்ள பங்குராவிற்கு வந்ததும், பின்னர் சத்தீஸ்கர் சென்று தங்கி இருந்த நிலையில் வேலை பறிபோனதால் மீண்டும் சொந்த ஊரில் வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இருக்கும் என்று நினைத்து வந்ததாக தெரிவித்தார். ஆனால் வாக்காளர் பட்டியலில் இருந்து அவர் இறந்து விட்டதாக கூறி 2002 ம் ஆண்டுகளுக்கு முன்பாக பெயர் நீக்கப்பட்டு விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து வாக்குச்சாவடி அதிகாரிகள் சொந்த குடும்பத்தினர் அவர் இறந்து விட்டதாக கூறிய பிறகு எப்படி அவருக்கு வாக்காளர் அட்டை கொடுக்க முடியும் என்றும், தற்பொழுது உயிரோடு இருப்பது தெரியவந்த நிலையில் அதனை நிரூபிப்பதற்காக உரிய ஆவணங்களை கொடுத்தால் மட்டுமே மீண்டும் அவருடைய பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும் என்று தெரிவித்தனர்.
