Kathir News
Begin typing your search above and press return to search.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நாளை மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்!!

நீண்ட இடைவெளிக்கு பிறகு நாளை மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்!!
X

G PradeepBy : G Pradeep

  |  19 Nov 2025 8:39 PM IST

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் வரும் நவம்பர் 20ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்ளப் போவதாக மாநிலத்தின் பொதுச்செயலாளர் தருண் குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

இம்பாலில் உள்ள கோன்ஜெங் லெய்காயில் நடக்க இருக்கும் இந்த விழாவில் தொழில்முனைவோர் மற்றும் புகழ்பெற்ற நபர்களை நவம்பர் 20ஆம் தேதி தலைவர் சந்திக்கப் போவதாகவும், அதன் பிறகு மணிப்பூரின் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின தலைவர்களை 21 ஆம் தேதி சந்திக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு மணிப்பூருக்கு வருகை தந்ததாகவும், அதன் பிறகு தற்பொழுது தான் வரப்போகிறார் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு இரண்டு இனத்தை சேர்ந்த மக்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து 250 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்விற்கு பிறகு முதல்வர் பைரன் சிங் ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி குடியரசு தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது.

இந்த அரசு ஆனது வரும் 2027 ஆம் ஆண்டு வரை இருக்கும் பட்சத்தில் மணிப்பூரில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் மணிப்பூருக்கு செல்வது அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News