பாரதம் என்று இந்தியாவை அறிவிக்க அவசியம் இல்லை! ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பரபரப்பு பேச்சு!

By : G Pradeep
ஆர்எஸ்எஸ் அமைப்பானது தொடர்ச்சியாக இந்தியா இந்துக்களின் தேசம் என்றும், பாரதம் மற்றும் இந்து ராஷ்டிரம் என்று தொடர்ச்சியாக கூறி வருகிறது. சமீபத்தில் இந்த அமைப்பின் நூற்றாண்டு விழா நடத்தப்பட்ட நிலையில், அமைப்பின் தலைவர் மோகன் பகவத் இந்து ராஷ்டிரம் என்று இந்தியாவை அழைப்பதற்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இந்து என்பது வெறும் மதச் சொல் மட்டும் இல்லை, பல ஆண்டுகால கலாச்சார தொடர்ச்சியில் நிலை பெற்றிருக்கும் நாகரீக அடையாளமாகும். இந்துக்கள் அனைவருமே பாரதம் என்பதில் மகிழ்ச்சி எனவும், பாரதம், இந்து என்கின்ற இரண்டு சொற்களும் ஒன்றுதான் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஆர் எஸ் எஸ் அமைப்பானது யாருக்கும் கெடுதல் நினைப்பதற்காக படுத்தியது அல்ல என்றும், நலன்களை வளர்த்து இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு என்று கூறியுள்ளார். ஆனால் ஒரு சில திராவிட கட்சிகள் அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட கொள்கைக்கு ஏற்றவாறு அரசியலை நடத்தி வருகின்றனர்.
பொது இடங்களில் அவர்கள் இந்துக்கள் இல்லை என்று தெரிவித்தாலும் கூட உள்ளுக்குள் இந்துக்களாக தான் உள்ளனர். திராவிட கொள்கைகளை பின்பற்றுபவர்கள் இந்துக்களாக மட்டும் தான் இருக்க முடியும் என்றும், அரசியலுக்காக மட்டும் திராவிட கொள்கைகளை பின்பற்றி வருகின்றனர் என்று ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
