திறந்தவெளி கழிப்பறை இல்லாத கிராமங்களின் எண்ணிக்கை உயர்வு!! ஓடிஎப் அறிவிப்பு!!

By : G Pradeep
நேற்று உலக கழிப்பறை தினம் கடைபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய ஜில் சக்தி அமைச்சகம் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் 5.67 லட்சம் கிராமங்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதில்லை என்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி இந்த ஆண்டு இதனுடைய சதவீதம் உயர்ந்து இருப்பதாகவும், இதில் 4.86 லட்ச கிராமங்கள் ஓடிஎப் பிளஸ் நிலையை அடைந்து விட்டதாக தெரிவித்துள்ளது. இந்த கிராமங்கள் திறந்தவெளிகளில் மலம் கழித்தல் நிலை இல்லாமல் உள்ளதாகவும், திட மற்றும் திரவ கழிவுகளை நிர்வகிப்பதில் தூய்மையாக பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மத்திய ஜில் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து நாட்டில் 12 கோடிக்கும் மேற்பட்ட கழிப்பறைகளை கட்டித் தந்து 95% கிராமங்களை திறந்தவெளியை கழிப்பறை இல்லாத கிராமமாக அறிவித்துள்ளது. இந்த திட்டமானது பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்டு நாட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.
