வறுமையிலிருந்து இந்தியா மீண்டுள்ளது!! யுனிசெப் அமைப்பு வெளியிட்ட அறிக்கை!!

By : G Pradeep
உலக குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டதையொட்டி யுனிசெப் அமைப்பானது அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2013 - 14 ம் ஆண்டு முதல் 2022 -23 ம் ஆண்டு வரை 24.8 கோடி குழந்தைகள் உட்பட மக்கள் வறுமையிலிருந்து மீண்டு வருவதற்கு இந்தியா உதவி செய்திருப்பதாக தேசிய பன்முக வறுமை குறியீடு தெரிவித்துள்ளது. இதன் மூலம் வறுமை விகிதமானது 29.2%லிருந்து 11.3% என குறைந்துள்ளது. இந்தியாவின் வறுமை குறைப்பில் சமூகத் துறை முதலீடுகள் மூலமாக முன்னேற்றம் கண்டுள்ளது.
மேலும் வறுமையை ஒழிப்பதற்காக மதிய உணவு திட்டம், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம், போஷான் அபியான், சமக்ர ஷிக்ஷா, பிஎம் கிசான், தூய்மை இந்தியா, ஜல் ஜீவன் திட்டம் போன்றவை உதவி செய்துள்ளது. மேலும் ஊட்டச்சத்து, கல்வி, வருமான ஆதரவு, சுகாதாரம், அனைவருக்கும் வங்கிக் கணக்கு வசதி உள்ளிட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு உதவி செய்து வருவதாகவும், 20.6 கோடி குழந்தைகளுக்கு வீடு, குடிநீர், கல்வி சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து உட்பட்டவைகளில் ஏதேனும் ஒன்று கிடைக்காத நிலை தற்பொழுது வரை என்னிடத்தில் வருவதாக கூறப்படுகிறது.
