புதிய தொழிலாளர் சட்டத்தால் அதிகரிக்கப் போகும் வேலை வாய்ப்புகள்! வெளியான எஸ்பிஐ ஆய்வறிக்கை!

By : G Pradeep
தற்பொழுது மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டத்தின் படி மிகவும் குறுகிய காலத்தில் வேலையின்மை விகிதமானது 1.3% ஆக குறையும் என்றும், 77 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்பு உருவாகுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. புதிய தொழிலாளர் சட்டத்தின் மூலம் முறைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் பங்கானது 60.4% இருந்த நிலையில் தற்பொழுது 75.5% என உயரும் என கூறப்படுகிறது.
மேலும் சமூகத்துறை பாதுகாப்பானது 85% அதிகரித்து நாட்டின் தொழிலாளர் சந்தையை பலப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சேமிப்பு சதவீதமானது 30% என இருக்கும் நிலையில், இந்த புதிய சட்டத்தால் தனிநபர் நுகர்வு ஒரு நாளைக்கு ரூ.66 அதிகரிக்கும் என்றும், ஒட்டுமொத்த நுகர்வு நடுத்தர கால அட்டவணையின் படி ரூ.75 ஆயிரம் கோடி அளவிற்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது உள்நாட்டு செலவினும் அதிகரிப்பதால் மேலோங்கும் என்று எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
