ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட நிலைமை!! முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் இத்தனை பேர் தோல்வியா???

By : G Pradeep
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் 1996 பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழக அரசால் நடத்தப்பட்ட தேர்வில் 2.36 லட்சம் முதுநிலை பட்டதாரிகள் கலந்து கொண்ட நிலையில் கட்டாய தமிழ் பாடத் தேர்வில் 85 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தோல்வி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகிறது.
தமிழக அரசின் பணிகளுக்கு கட்டாய தமிழ் அந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் நிலை பட்டதாரி ஆசிரியர்களின் பணிகளுக்கான போட்டி தேர்வில் மொத்தம் 50 மதிப்பெண்கள் கட்டாய தமிழ் பாடத்தில் 40% அதாவது 20 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி என்று இருக்கும் பட்சத்தில் 36% பேர் அதாவது 85000 பேர் தோல்வி அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட பாடங்களின் விடைகள் சரியாக அளித்திருந்தாலும் கூட கட்டாய தமிழில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர்களின் மற்ற பாடங்கள் திருத்தப்படும்.
இந்தத் தேர்வில் பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் கல்வியியல் பட்டப்படிப்பு என மூன்று பட்டம் பெற்றவர்கள் எம்.பில் மற்றும் பிஎச்.டி இடம் பெற்றவர்கள் எழுதியுள்ள நிலையில் பத்தாம் வகுப்பு நிலையில் இருக்கும் தமிழில் 40% மதிப்பெண் கூட பெற முடியாமல் தோல்வியடைந்து இருப்பதை பார்க்கும் பொழுது மிகவும் அதிர்ச்சியாக இருப்பதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது பள்ளியிலேயே தமிழை ஒரு பாடமாக படிக்காமல் பள்ளிப்படிப்பை முடிக்கும் பலரும் உள்ளனர்.
அதனாலயே போட்டி தேர்வுகளில் இதுபோன்று நிலைமை ஏற்படுகிறது. பல பட்டங்களை பெற்றவர்கள் கூட தமிழில் 20 மதிப்பெண் எடுக்க முடியாமல் தோல்வியடைந்து இருப்பதை பார்க்கும் பொழுது அவர்கள் தமிழை ஒரு பாடமாக படிக்காமல் இருந்ததும் ஒரு காரணமாக தெரிகிறது என பல முனைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
