நாடாளுமன்றம் நாடகத்திற்கான இடம் இல்லை!! எதிர்க்கட்சிகளை வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி!!

By : G Pradeep
பீகார் தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகு எதிர்க்கட்சி அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் பல இடங்களில் இருந்து வருகிறது. இந்நிலையில் குளிர் காலக் கூட்டத் தொடரை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சிகள் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவையை செயல்பட விடாமல் தடுத்து வருகின்றன. இதனால் இளம் எம்.பி.க்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்ட முடியாமல் இருந்து வருகின்றனர்.
அவையை பொறுத்தவரையில் வெற்றி தோல்வி அனைத்துமே விலக்கி வைக்க வேண்டும். வேண்டுமானால் எதிர்க்கட்சிக்கு சில உதவி குறிப்புகளை தருவதற்கு தயாராக இருப்பதாகவும், பீகார் தேர்தல் முடிவு வந்து பல நாட்கள் ஆன நிலையில் இன்னும் அதில் இருந்து எதிர்க்கட்சி மீண்டு வராமல் உள்ள நிலையில் இதுபோன்று செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும், பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும், இளம் எம் பி எல் மற்றும் முதல்முறையாக எம்பி யாக இருப்பவர்கள் திறமைகளை காட்டுவதற்கும், தொகுதி பிரச்சனைகள் பற்றி பேசவும் வாய்ப்பில்லாமல் போவதாகவும் தெரிவித்தார். அனைத்து கட்சி எம்பிகளுக்கும் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். புதிய தலைமுறையினர்களால் தேசத்திற்கு நன்மை அளிக்க முடியும்.
இதனை எதிர்க்கட்சிகள் சற்று ஏற்றுக் கொண்டு, அவர்களின் நாடகத்தை வேறு எங்கேயாவது அரங்கேற்றிக்கொள்ள கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். நாட்டில் பல இடங்களில் நாடகங்களை அரங்கேற்றிக் கொள்ளலாம் என்றும், அதற்கு நாடாளுமன்றம் இடமல்ல என்றும், இது நீதிக்கானது. கோஷங்களுக்கானது அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
