காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கப்பல்லி திருட்டு வழக்கில் காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

By : G Pradeep
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கப் பல்லி, தங்க சந்திரன், தங்க சூரியன், வெள்ளி பல்லி போன்ற சிற்பங்கள் இருக்கும் நிலையில் அதனை திருடுவதற்கு முயற்சி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து அதை விசாரிப்பதற்கு சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொது நலன் வழக்கு தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் அர்ச்சகர் உட்பட தங்கப் பல்லி போன்ற சிலைகளை திருடுவதற்கு திட்டமிட்டு முயற்சி செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவிலுக்கு சென்று பார்க்கும் பொழுது அங்கிருந்து தங்கப் பல்லி சிலை மாயமாகி இருந்த நிலையில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழு இது குறித்து விசாரணை நடத்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் ஆரம்பகட்ட விசாரணையில் எந்தவித திரட்டும் நடக்கவில்லை என்பதை அறிந்து புகாரை முடித்து விட்டதாக காவல்துறை தரப்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்ததை தொடர்ந்து நீதிபதிகள் இந்த மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
