திருப்பரங்குன்றம் விவகாரத்தை தொடர்ந்து இந்துக்களுக்காக குரல் எழுப்பிய பவன் கல்யாண்!

By : G Pradeep
ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் திருப்பரங்குன்றம் விவகாரத்தை தொடர்ந்து இந்துக்களின் மரபு மற்றும் சடங்குகளை கேலி செய்வது சமீப காலங்களில் வழக்கமாகி விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய சமூக வலைதள பக்கத்தில், இந்துக்கள் அவர்களின் நம்பிக்கையை பின்பற்றுவதற்கும், சடங்குகள் செய்வதற்கும் தற்பொழுது வரை நீதிமன்றத்தின் தலையீடு இருந்து வருகிறது.
இதை பார்க்கும் பொழுது மிகவும் வருத்தமாகவும், முரண்படாகவும் தெரிகிறது. இந்நிலையில் மிகவும் புகழ்பெற்ற கோவிலான திருப்பரங்குன்ற மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியும் கார்த்திகை தீபம் ஏற்ற முடியாமல் போனது. இது போன்ற இந்து மரபுகளை கேலி செய்வதற்கு என்று தனியாக ஒரு கூட்டமே உள்ளது. எந்த மத விழாவையும் ஒரு வாரம் கழித்துக் கொண்டாட முடியாது.
இந்த கார்த்திகை தீபத்திருநாள் பக்தர்களிடமிருந்து பறிக்கப்பட்டு உள்ளது. இதற்கு காரணம் இந்துக்கள் இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு சமரசத்திற்கு வந்து விடுவார்கள் என்ற எண்ணம். இதுபோன்று மற்ற மதத்தை சார்ந்த நிகழ்வுகளை செய்வார்களா என்பது கேள்விக்குறிதான்.
இந்துக்கள் ஜாதி மற்றும் மொழியினால் பிரிக்கப்பட்டு இருப்பதால் இதுபோன்ற கேலி மற்றும் அவமானங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இவற்றை அனைத்தையும் பார்த்து ஒரு நாள் இந்துக்கள் விழித்தெழுவர்கள் என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
