வரப்போகும் தேர்தலில் தமிழகம் மற்றும் மே.வ தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் வெற்றி! அமித்ஷா பேச்சு!

By : G Pradeep
மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலத்தில் பல்வேறு அரசுத் திட்டங்களை தொடங்கி வைத்த நிலையில் 2014 மக்களவைத் தேர்தல் முதல் 2025 வரை பாஜக தொடர்ந்து வெற்றியை பெற்று வருகிறது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பிரதமர் மோடி பதவி ஏற்றது பெருமையாகும்.
மோடியின் ஆட்சிக் காலத்தில் நம் நாடு பல துறைகளில் வளர்ச்சி அடைந்து உலக அளவில் சிறந்த நாடாக வலம் வருகிறது. மக்கள் மற்ற கட்சிகளை கற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. எனவே மேற்கு வங்கத்திலும், தமிழகத்திலும் பீகாரை போல தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும், அதற்கு மம்தா பானர்ஜியும், ஸ்டாலினும் தயாராகிக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மற்றும் அதிமுக தமிழகத்தில் இடம்பெற்றிருக்கும் நிலையில் அமித்ஷா விரைவில் தமிழகத்திற்கு வர இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. மேலும் அமித்ஷா தமிழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேற்றப்படும் என்று கூறியது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.
