அரசியலமைப்பை பகவத் கீதையுடன் ஒப்பிட்டு பேசிய பவன் கல்யாண்!!

By : G Pradeep
பவன் கல்யாண் கர்நாடகா உடுப்பியிலுள்ள கிருஷ்ண மடத்தில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதை உபதேசம் செய்யும் ஓவியமானது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை, அரசுக் கொள்கைகளின் வழிகாட்டு நெறிமுறைகள் அமந்துள்ளது.
அதன் மூலம் அரசியல் அமைப்பு சட்டத்தின் மதிப்பீடுகளை நிலை நாட்ட பகவத் கீதையின் ஓவியம் உணர்த்துவதாக தெரிவித்தார். நீதியின் தார்மிக வழிகாட்டியாகவும், நீதியின் சட்ட ரீதியான வழிகாட்டியாகவும் தர்மம் மற்றும் அரசியல் அமைப்பு ஒருமித்த நோக்கத்துடன் உள்ளது. கையால் எழுதப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம் தான் பகவத் கீதை.
அரசியலமைப்பு மற்றும் பகவத் கீதை ஆகிய இரண்டுமே ஒரே கருத்துக்களை கொண்ட கருணை மிகுந்த சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடன் இருப்பதாக தெரிவித்தார். காங்கிரஸின் மூத்த தலைவர் பி.கே. ஹரிபிரசாத், அரசியலமைப்பு சட்டத்தை பற்றி தெரியாதவர்கள் தான் இது போல பேசுவார்கள். மதசார்பற்ற அரசியலமைப்பு சட்டத்தில் தர்மத்திற்கு இடம் கிடையாது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவர் பேசியதற்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் தங்களுடைய எதிர்ப்புகளையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
