புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பு அமல்படுத்தப்படுவதால் தொழிலாளர் நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படாது! சஞ்சய் திவாரி பதில்!

By : G Pradeep
புதிய தொழிலாளர் சட்டம் அமலுக்கு வந்தால் ஏற்கனவே உள்ள தொழிலாளர் நல வாரியங்கள் மற்றும் நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்து வருகிறது. இந்நிலையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சகத்தின் செயலர் சஞ்சய் திவாரி விளக்கம் அளித்துள்ளார்.
அதில் புதிய தொழிலாளர் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் மற்றும் மாநில அரசுகளின் தற்போதைய சமூக பாதுகாப்பு திட்டங்கள் எப்போதும் போல நடைமுறையில் இருக்கும் என்றும், இந்த புதிய சட்டத்தால் வாரியங்களின் செயல்பாட்டில் எந்த தடையும் ஏற்படாது.
இதன் முலம் பல்வேறு பிரிவினருக்கு தேவையான புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அளிக்கும் வகையில் மாநில அரசுக்குப் பரிந்துரை செய்யும் அதிகாரத்தை பெற்று இருக்கும். அதனால் புதிய தொழிலாளர் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு மத்திய மற்றும் மாநில அரசுகளின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களில் எவ்வித எதிர்வினை விளைவும் ஏற்படாது என்று தெரிவித்தார்.
