Kathir News
Begin typing your search above and press return to search.

அதிகாரிகளின் உதவியுடன் நடக்கும் மணல் கொள்ளை! உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் வலியுறுத்தல்!

அதிகாரிகளின் உதவியுடன் நடக்கும் மணல் கொள்ளை! உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் வலியுறுத்தல்!
X

G PradeepBy : G Pradeep

  |  11 Dec 2025 5:39 PM IST

கனிம வளங்களில் ஒன்றான மணல் அதிகாரிகளின் உதவியுடன் தமிழகத்தில் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குற்றம் சாட்டினர். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் நேற்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கனிமவள ஆணையர் மோகனிடம் நீதிபதிகள் கனிம வளம் கொள்ளையடிப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது மோகன்மணல் போன்ற கனிம வளங்களை அள்ளப்படுவது ஜிபிஎஸ் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அத்துமீறி கொள்ளையடிப்பவர்களிடம் அபதாரம் விதிக்கப்படுவது மட்டுமல்லாமல் அவர்களுடைய வாகனங்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதிகள் மணல் போன்ற கனிம வளங்களை கொள்ளையடிப்பவர்கள் மீது அபராதம் மட்டும் விதிப்பது போதாது என்றும், குற்றவியல் ரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

கனிம வளங்களை அதிகாரிகளின் உதவியுடன் சட்ட விரோதமாக சுரண்டுவதால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் இதே நிலைமை தொடர்ந்து நடந்து கொண்டு வந்தால் வருங்காலத்தில் பெரும் ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் கனிமவள ஆணையர் இதுவரை மணல் கொள்ளைகளை தடுப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News