ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!!

By : G Pradeep
பிரதமர் மோடி ஜோர்டானில் மன்னர் அப்துல்லா-II முன்னிலையில் இந்தியா - ஜோர்டான் முதலீட்டாளர் சந்திப்பில் உரையாற்றினார். இந்தியா மற்றும் ஜோர்டான் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு குறித்து எடுத்துரைத்தார்.
ஜோர்டான் மூலம் இந்திய நிறுவனங்கள் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பிற நாடுகளின் சந்தைகளை அணுக முடியும் என்று கூறினார். இந்தியா, ஜோர்டானின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளி ஆகும்.
வணிக உலகில் எண்கள் முக்கியம் என்பதை தான் அறிந்துள்ளதாகவும், ஆனால் எண்களை எண்ணுவதற்கு மட்டும் தாங்கள் இங்கு வரவில்லை. நீண்டகால அடிப்படையில் உறவுகளை உருவாக்க தாங்கள் இங்கு வந்துள்ளோம் என கூறினார்.
குஜராத்தில் இருந்து ஜோர்டானின் பெட்ரா நகரம் வழியாக ஐரோப்பாவுக்கு மிகப் பெரிய அளவில் வர்த்தகம் முந்தைய காலகட்டத்தில் நடந்தது. அந்த இணைப்புகளை தற்பொழுது மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.
இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வேகமாக முன்னேறி வரும் நிலையில் இந்தியாவின் வளர்ச்சி 8 சதவீதத்துக்கு மேல் உள்ளது. இந்த வளர்ச்சி எண்கள், உற்பத்தித்திறன் சார்ந்த நிர்வாகம் மற்றும் புதுமை சார்ந்த கொள்கைகளின் விளைவாகும்.
இந்தியா மற்றும் ஜோர்டான் இடையேயான ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் பயனளிக்கும். இந்திய நிறுவனங்கள் ஜோர்டானில் முதலீடு செய்ய வாய்ப்புகள் உள்ளன.
