காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதல்: என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்! என்ஐஏ.வுக்கு இளம்பெண் நன்றி!

By : G Pradeep
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததை தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குப் பதிந்து கைது நடவடிக்கை மேற்கொண்டது.
மேலும் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் என்ஐஏ நேற்றுமுன்தினம் 1,597 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் உத்தர பிரதேசத்தின் கான்பூர் பகுதியை சேர்ந்த சுபம் திவிவேதி உயிரிழந்த நிலையில் என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததற்கு மத்திய அரசிற்கும், ராணுவம் மற்றும் என்ஐஏ க்கும் சுபமின் தந்தை மற்றும் சுபமின் மனைவி நன்றி தெரிவித்துள்ளனர்.
மேலும் அவரின் தந்தை, மத்திய அரசு தீவிரவாதத்துக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட வேண்டும் என்றும், நாட்டு மக்களும் தீவிரவாதத்துக்கு எதிராக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
