பிரதமர் மோடியின் மத்திய கிழக்கு சுற்றுப்பயணம்!! இதுதான் காரணமா?

By : G Pradeep
மத்திய கிழக்கு சுற்றுப்பயணத்தைப் பிரதமர் மோடி ஜோர்டானில் தொடங்கி ஆப்பிரிக்கவின் எத்தியோப்பியா, இஸ்லாமிய நாடான ஓமன் ஆகியவற்றிற்கு பயணம் செய்து மத்திய கிழக்கில் முக்கிய உறவுகளை வலுப்படுத்த போவதாக கூறப்படுகிறது. ஜோர்டான் மற்றும் ஓமானுடனான உறவுகளை வலுப்படுத்தி மத்திய கிழக்கில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை நம்பியிருக்க வேண்டியது கிடையாது என்பதை வெளிப்படுத்துகிறது.
ஜோர்டான் மேற்கு ஆசியாவில் ஒரு முக்கிய புவிசார் அரசியல் மையம், இது ஈராக், சிரியா, இஸ்ரேல், பாலஸ்தீனத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. இங்கு விரிவாக்கம் செய்வது மற்ற அரபு நாடுகளிலும் இந்தியாவின் பிடியை வலுப்படுத்த உதவும்.
இந்த பயணம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வலுப்படுத்துவதோடு, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிக்கும்.
எனவே இந்தியாவிற்கும் ஓமனுக்கும் இடையில் ஒரு சாத்தியமான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம்.
