திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு அசைவ பிரியாணி கொண்டு சென்றதால் சர்ச்சை!!

By : G Pradeep
திருப்பரங்குன்றம் மலை மேல் சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு அசைவ பிரியாணி கொண்டு சென்ற கேரளம் மற்றும் தென்காசி முஸ்லிம்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் தமிழக அரசும், கோயில் நிர்வாகமும் அனுமதிக்கவில்லை.
மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா சந்தனக்கூடு திருவிழா டிசம்பர் 21-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19 நாட்களாக இருந்து வந்த போலீஸாரின் தடைகள் அகற்றப்பட்டு, மலைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
62 பேர் கொண்ட குழுவில் 57 பேர் அனுமதிக்கப்பட்டனர், ஆனால் 5 பேர் அசைவ பிரியாணி கொண்டு சென்றதால் தடுக்கப்பட்டனர்.
போலீஸார் சோதனையில் அசைவ பிரியாணி கண்டறியப்பட்டதால், அங்கு திடீர் சர்ச்சை ஏற்பட்டது.
