டெல்லி குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திக்கு அனுமதி அளித்த மத்திய அரசு!!

By : G Pradeep
2026-ம் ஆண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி பங்கேற்க மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசு ‘பசுமை மின் சக்தி’ (Green Energy) என்ற கருப்பொருளைத் தேர்ந்தெடுத்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஆற்றல் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதை பறைசாற்றும் வகையில் இந்த ஊர்தி வடிவமைக்கப்பட உள்ளது.
கடந்த 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் டெல்லி அணிவகுப்பில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும், மத்திய அரசு கொண்டு வந்த சுழற்சி முறை (Rotation Policy) அடிப்படையில், அனைத்து மாநிலங்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
10-க்கும் மேற்பட்ட மாநில ஊர்திகளுடன் தமிழக ஊர்தியும் டெல்லி கடமைப் பாதையில் வலம் வரும் என தெரிவிக்கப்பட்டது.
