அசைவ உணவுக்கு தடை: திருப்பரங்குன்றம் விவகாரம் பரபரப்பு!!

By : G Pradeep
திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு கொண்டு செல்லவதை தடுக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.
முருகனின் முதல் படைவீடு என மிக முக்கியத்துவம் வாய்ந்தது திருப்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் இந்துக்கள் எதிர்பார்ப்பின் படி உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற தமிழக அரசின் இந்து அறநிலைத்துறை மறுத்து விட்டது.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ந்து இந்துக்களுக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் மலை மீது திமுக எம்பி நவாஸ் கனி அசைவ உணவு கொண்டு சென்று சாப்பிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி இந்துக்களிடையே கடும் எதிர்ப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டது.
ஆளும் திமுக அரசு வாக்குவங்கி அரசியலை கைவிட்டு பதட்டத்தை உருவாக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.
