Begin typing your search above and press return to search.
ராமேஸ்வரம் கோவில் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்!! வடமாநில பக்தர்கள் மீது தாக்குதல்!!

By : G Pradeep
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் உலகபிரசித்த பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அனைத்து மாநிலங்கள் உள்பட உலக நாடுகளிலிருந்து வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் கோதண்ட ராமர் கோவில் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. வடமாநில பக்தர்களின் மண்டையை உடைத்து ஜட்டியுடன் ஓட விட்டு விரட்டி அடித்துள்ளனர்.
இது ராமேஸ்வரம் தீவுப்பகுதிக்கு மிகப்பெரிய உலகளாவிய கெட்ட பெயரை ஏற்படுத்தும் என பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். காவல்துறை மற்றும் தமிழக அரசு இதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
