காங்கிரஸின் ஜிங் ஜாங் போட்டி குறித்து பேசிய அண்ணாமலை!!

By : G Pradeep
தமிழக காங்கிரஸை பொறுத்தவரை டெல்லி தலைமைக்கு யார் ஜிங் ஜாங் போடுவது என்று ஒரு குரூப்பும், தமிழ்நாட்டில் முதல்வருக்கு யார் ஜிங் ஜாங் போடுவது என்று ஒரு குரூப்பும் தான் உள்ளது என பாஜக முன்னாள் மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
வேலூரில் அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வருவதைத்தான் தடுக்க முடியும். ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை பள்ளி மாணவர்களை, நடுத்தர மக்களை குறிவைத்து தாக்கக்கூடிய விஷயம் எங்கிருந்து வந்தது? மாநிலத்துக்கு உள்ளே கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது.
காங்கிரஸை பொறுத்தவரை இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என்று சண்டை போட்டு 2026-ல் தேர்தல் நடக்கும்போது நடுத்தெருவில் நிற்கப் போகிறார்கள். அதற்கான வேலைகளைத் தான் தற்போது செய்து வருகிறார்கள்.
